Untitled-1.png
Aandaal Audio Intro

Aandaal

பரம்பரைப் பரம்பரையாக மானாவாரிப் பயிர் (வானம் பார்த்த பூமி) விவசாயக் குடும்ப பின்னணியில் இருந்து வந்து முதல் தலைமுறை தொழில்முனைவராக உருவெடுத்திருக்கிறோம். விவசாயமே உணவு உற்பத்திதான். அதன் நீட்சியாக மரச்செக்கு எண்ணெய் & மண்கட்டிய நாட்டு துவரம்பருப்பு உற்பத்தித் தொழிலில் இறங்கியுள்ளோம்.

 

"பத்தோடு பதினொன்று; அவற்றுள் ஆண்டாள் தனி என்று' ஊர்போற்ற விளங்க வேண்டும் என்னும் நோக்கத்தில் 12/12/2018-ஆம் தேதி தொடங்கப்பட்டு தரத்திலும், சுவையிலும் தனித்தன்மையுடன் பயணித்து வருகிறது ஆண்டாள்_மரச்செக்கு_எண்ணெய் சிறுதொழில் நிறுவனம். எண்ணெய் வித்துக்களை (வேர்க்கடலை, எள் & தேங்காய் கொப்பரை) வெயிலில் நன்கு உலர்த்தி வாகை மரச்செக்கில் ஆட்டி எண்ணெயை வெயிலில் காய வைத்து கசடுகளைத் தெளியவிட்டு சுகாதாரமான முறையில் சேமித்து பாட்டில்களில் நிரப்புகிறோம். எண்ணெயை வெயிலில் காயவைப்பதால் சிக்குவாடை வராது. குறைவான நாட்களுக்குள் கெட்டுப்போகாது. உயர்ந்த தரம் - உரிய விலை' என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு `உற்பத்தி & விற்பனை’ ஆகியவற்றில் சீரிய கவனம் செலுத்துவதுடன், நம்மைச்சுற்றி உள்ளவர்களின் ஆரோக்கியம் மேம்பட நாமும் சிறியதொரு பங்களிப்பு செய்கிறோம் என்னும் மனத்திருப்தியுடன்  செயல்படுகிறோம்.

சுய உறுதிமொழி: 

எங்களின் குழந்தைகளுக்கு ஒருபோதும் நஞ்சினை உணவாகக் கொடுக்க மாட்டோம். ஆண்டாள் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் எங்களின் குடும்பத்தினர்களே! எங்களது தயாரிப்பு பொருட்கள்:- கடலை எண்ணெய் | நல்லெண்ணெய் | தேங்காய் எண்ணெய் | மண்கட்டிய துவரம்பருப்பு

 

பிற விற்பனைப் பொருட்கள்:- ஏலக்காய் | மிளகு | பனங்கருப்பட்டி | நாட்டுச்சர்க்கரை

தயாரிப்பு முறைகள்:-

 

கடலை எண்ணெய் தரமான நாட்டு வேர்க்கடலையுடன் தனியா (கொத்தமல்லி விதை) சேர்த்து தயாரிக்கப்பட்டது. பித்தம், செரிமானக் கோளாறு, நெஞ்செரிச்சல் போன்றவற்றை தனியா நிவர்த்தி செய்துவிடுவதுடன், சமையலுக்கு தனிச்சுவையைக் கொடுக்கும். தவிர, சமைக்கும் போது வீடே கமகமக்கும்.

 

பயன்பாடுகள்

 சமைக்கவும் & பலகாரங்கள் சுடவும் பயன்படுத்தலாம்.

 

நல்லெண்ணெய் தரமான எள்ளுடன், தூய்மையான பனங்கருப்பட்டி சேர்த்து தயாரிக்கப்பட்டது. எள் இயல்பில் சூட்டுத்தன்மை உடையது. எள்ளிலிருந்து கிடைக்கும் எண்ணெய் குளிர்ச்சியானது. ஆக, சூட்டுத்தன்மை மிக்க ஒரு மூலப்பொருளில் இருந்து குளிர்ச்சித்தன்மையுடைய எண்ணெயை உருவாக்கும் ‘ரசவாதத்தை’ பனங்கருப்பட்டிதான் நிகழ்த்துகிறது. 

 

பயன்பாடுகள் 

சமைக்கவும், இட்லி & பருப்புப் பொடிகளுடன் கலந்து உண்ணவும், வாய் கொப்பளிக்கவும் (Oil Pulling), எண்ணெய் குளியலுக்கும் & விளக்கேற்றவும் பயன்படுத்தலாம். 

 

தேங்காய் எண்ணெய் நன்கு தேறிய கொப்பரையுடன் (சல்பர் இல்லாதது) முதல்தரமான ஏலக்காய் & நாட்டு எலுமிச்சை சேர்த்து தயாரிக்கப்பட்டது. ஏலக்காய் மிகச்சிறந்த நறுமணம் தருவதுடன் செரிமானக் கோளாற்றை நீக்கும். எலுமிச்சம்பழம் எண்ணெயை நன்கு சுத்திகரிப்பதுடன், எளிதில் கெட்டுவிடாமலும் பாதுகாக்கும்.

 

பயன்பாடுகள் 

சமைக்கவும், கூந்தலுக்கும், குடிக்கவும் & உடலில் பூசிக்கொள்ளவும் பயன்படுத்தலாம். 

 

மண்கட்டிய துவரம்பருப்பு செம்மண்ணைக் குழம்பாகக் கரைத்து நாட்டுத்துவரைக்குப் பூசி ஒன்றாக குவித்து இரவில் உப்பவைத்து அவற்றைப் பிரித்து பகலெல்லாம் வெயிலில் உலர்த்தி (இவ்வாறாக இரண்டு நாட்கள் இவ்வாறாகப் பதப்படுத்தி துவரையை உடைத்து பருப்பையும் தோலையும் பிரித்து தூய்மைப்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இதுதான் பாரம்பரிய முறையில் மண்கட்டிய துவரம்பருப்பு தயாரிக்கும் முறை.

 

பயன்பாடுகள்

சாம்பார் , பருப்புப்பொடி, பருப்பு உருண்டைக் குழம்பு, போன்றவற்றிற்கு உகந்தது. மணமும், சுவையும் மிக்கது.

my products

Photo from Sphoorthi Collections (1).jpg
Photo from Sphoorthi Collections (2).jpg
Photo from Sphoorthi Collections.jpg

Contact

Aandaal Cold Pressed Oil

6/1568 Sundampatti Village

Patchur PO, Tirupathur Taluk,

Tamilnadu, South India – 635 854

aandaalmco@gmail.com

7358833229 / 9087628669

fblogo_edited.jpg
whatsappshopping.jpeg
Aandaal QR.png

aandaal digital qr

scan using mobile