
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்-பாரதி
பல்லாயிரமாண்டுகள் பழமையான வரலாறு,
அளப்பரிய இலக்கியங்கள்,
செறிவான இலக்கணம்
செம்மையான அறங்கள்

எனச் சிறப்புமிக்க செம்மொழியின் தனிச்சிறப்பு *ழ*! அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழை உலகமெங்கும் தழைக்க வைக்க வேண்டியது தமிழ்க்கூறும் நல்லுலகின் தலை யாய கடமை.அந்தத் தமிழ்க் கடலில் ஒரு கையளவு பருக *ழ* வகுப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது.தமிழ்க் கற்பித்தலில் *ழ* எனும் இந்த வகுப்பு சிறப்பானது....! பிற மொழிகளை மொழியாக மட்டும் கற்றுக்கொள்ள முடியும். ஆனால் தமிழ், நம் பண்பாடு வாழ்வியல் போன்றவற்றை உள்ளடக்கியது.
மொழியை இரண்டு முறைகளில் கற்றுக்கொள்ளலாம்.தகவல் பரிமாற்றத்திற்கான ஆரம்பநிலை,அதன் பரிணாமமான பேச்சுக்கலை என இரண்டு வகைகளுக்கும் *ழ*வில் பயிற்சிகள் உள்ளன.
குழலினும் யாழினும் இனிதாய் கிள்ளை மொழி பிதற்றும் பிள்ளைக்கு பிள்ளைத்தமிழ்பாடியாடும் பதின்வயதுக்கு பார்போற்றும் தமிழறிய பைந்தமிழ்லகர, ளகர,ழகர ஒலியுணர்ந்து அறமும் பக்தியும் சுவைத்த சுவையுணர தமிழ்ச்சுவை படிக்காத பாமரனும் பகுத்தறிவு பெற்றிடும் வீச்சான பேச்சறிய சங்கே முழங்கு எனத் தமிழோடு உறவாடி மகிழவும், அயலகம் போனாலும் அன்னைமடிதேடும் அன்பு உறவுகளே. உங்கள் வேர்களைத் தேடும் பயணத்தில் *ழ* வை உங்கள் பாதையாகத் தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் தமிழை வெறும் மொழியாக மட்டுமின்றி உணர்வாகவும் உணர்ந்து கற்றுக்கொள்வீர்கள்.
*ழ* வின் பயிற்றுனரான நான் கவிதா சுரேஷ். தமிழ் மற்றும் இதழியலில் முதுகலைப் பட்டதாரி,தற்போது முனைவர்ப்பட்ட ஆய்வாளர்,முன்னாள் ஆசிரியை,தமிழைத் தவிர மலையாளம்,ஆங்கிலம்,ஹிந்தி போன்ற மொழிகளின் அறிமுகமும் உண்டு.குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பேச்சுக்கலைப் பயிற்சி அளிப்பதில் பதிற்றாண்டு அனுபவம் உண்டு.
*ழ* *பயிற்சிகள்*
*பிள்ளைத்தமிழ்*
*பைந்தமிழ்*
*தமிழ்ச்சுவை*
*சங்கே முழங்கு*
இங்கு தேர்வுகள் கிடையாது,ஆனால் தரம் குன்றாது!சலிப்பு ஏற்படுத்தும் முறைகள் இல்லை, ஆனால் சான்றிதழ் உண்டு! எதிர்வரும் தலைமுறைக்கு இனிமையான தமிழை அளித்திட *ழ* வுடன் இணையுங்கள். *மங்காத தமிழ்ச் சங்கு எங்கெங்கும் முழங்கட்டும்*....!!!




